search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்பத்தி நிறுத்தம்"

    • ஓபன் என்டு என்படும் ஓ.இ. மில்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு பஞ்சில் இருந்து கலர்நூல்கள் தயாரிக்கப்படுகிறது.
    • ஓ.இ. மில்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    பள்ளிபாளையம்:

    திருப்பூர், பல்லடம், சோமனுர் உள்ளிட்ட பகுதிகளில் ஓபன் என்டு என்படும் ஓ.இ. மில்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு பஞ்சில் இருந்து கலர்நூல்கள் தயாரிக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கலர்நூல்களை பயன்படுத்தி தான் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள விசைதறிகளில் அனைத்து ரக ஜவுளிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி முதல் கழிவு பஞ்சு விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி திருப்பூர், பல்லடம், சோமனுர் ஆகிய பகுதியில் செயல்படும் ஓ.இ. மில்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி கூடங்களில் நேற்று முதல் 10 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் தீபாவளி பண்டிக்கைக்கு 3 நாட்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

    • சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பரபரப்புக் கால கட்டணம் (பீக் அவர்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சுமார் ரூ.500 கோடி அளவிலான உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும் என அமைப்பின் நிர்வாகிகள் கூறினர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் அனைத்து தொழில்துறை சார்ந்த சிறு, குறு நிறுவனங்களும் மின் கட்டண சுமையிலிருந்து தங்களை மீட்க வலியுறுத்தி ஏற்கனவே 3 கட்டங்களாக போராட்டம் நடத்தியுள்ளன. தொழில்துறை மின்சார பயன்பாட்டில் கிலோவாட்டுக்கான கட்டணம் ரூ.35ல் இருந்து ரூ.154ஆக உயர்த்தப்பட்டது.

    மேலும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பரபரப்புக் கால கட்டணம் (பீக் அவர்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் கட்டண சுமையிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மீண்டு வர முடியாமல் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    இதனால் தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணத்தையும், பீக் அவர்ஸ் கட்டணத்தையும் திரும்ப பெற வேண்டும். 3பி மின் கட்டண முறையிலிருந்து 3ஏ1 கட்ட ண நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வோர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மல்டி இயர் டேரிப்பை ( பல ஆண்டு கட்டணம்) உடனடியாக ரத்து செய்து, 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.

    எல்டி கட்டண முறையில் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 4ம் கட்டமாக இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அதாவது ஆயில் மில், தேங்காய் நார் தொழிற்சாலை, ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், காங்கிரீட் கற்கள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்கள் இன்று உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

    இதன் காரணமாக சுமார் ரூ.500 கோடி அளவிலான உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும் என அமைப்பின் நிர்வாகிகள் கூறினர். எங்கள் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×